Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திகை மாத தீபஜோதி வழிபாட்டின் பலன்கள்...!!

கார்த்திகை மாத தீபஜோதி வழிபாட்டின் பலன்கள்...!!
அண்ணாமலையார் தீபம் என்பது திருவிளக்கின் விஸ்வரூபம். தீபம் என்பது லட்சுமி தேவியின் வடிவத்தையும் (சுடர்), சரஸ்வதி தேவியின் பிம்பத்தையும்(ஒளி), பார்வதியின் சக்தியையும்(வெப்பம்) ஒன்றாக சேர்ந்தது. திருவிளக்கு தீபச்சுடரில் மூன்று தேவிகளின் வடிவத்தை காணும்  அனைவரும் நற்கதி அடைவர் அன்பது ஆன்றோர் மொழி.
கார்த்திகை தீபத்தன்று தீபம் ஏற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன் மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து கிடைக்கும். தீப ஒளி தீய  சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மகாவிஷ்ணு, நெய், எண்ணெய்  நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர். 
 
வேத புராணங்களும் கூட விளக்கேற்றுவதால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபட உயர்வான பலன் தரும் என்றாலும்,  கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளும் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
 
தீபஜோதி வழிபாடானது இருள் போன்று நம்மை சூழ்ந்து நிற்கிற தடைகள், இடையூறுகளையும் ஏழரை சனி, அஷ்டமச்சனி போன்றவற்றால் ஏற்படக்கூடிய கெடுபலன்களையும் போக்கி ஒளிமயமான, வளமான வாழவை அருளும் என்பது நம்பிக்கை, சிவபெருமானே மலையாகி நிற்கும்  அண்ணாமலையின் வளமான வாழ்வு பெறுவோம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்திகை தீபத்திற்கு வீட்டில் எங்கெங்கு எத்தனை விளக்குகள் ஏற்றவேண்டும்...?