Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்திகை தீப விரதம் மற்றும் விளக்கேற்ற உகந்த நேரம் என்ன தெரியுமா...?

கார்த்திகை தீப விரதம் மற்றும் விளக்கேற்ற உகந்த நேரம் என்ன தெரியுமா...?
கார்த்திகை தீப வழிபாடு மொத்தம் மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. கார்த்திகை நட்சத்திரத்திற்கு முதல் நாள் பரணிதீபம் என்றும், கார்த்திகை நட்சத்திரம் அன்று கார்த்திகை தீபம் என்றும் மறுநாள் சுடலைக் கார்த்திகை என்றும் மூன்று நாட்கள் கார்த்திகை விளக்குகள்  ஏற்படுகின்றன.
மகிழ்ச்சியான திருமண வாழ்வு வேண்டியும், தங்கள் குழந்தைகளின் நலன் வேண்டியும் பெண்கள் கார்த்திகைத் திருநாளன்று விரதம்  மேற்கொள்கின்றனர்.
 
கார்த்திகை தீபத்தை கொண்டாடுபவர்கள் தங்கள் வசிப்பிடங்களை தூய்மைப்படுத்தி, மாலை நேரத்தில் வீட்டு வாசலில் வண்ணக் கோலம் இடவேண்டும். மண், பீங்கான் மற்றும் உலோகத்தினான சிறிய அகல் விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு பஞ்சு திரி போட்டு  விளக்கேற்றி விழிபட வேண்டும்.
 
விரத முறைகள்: 
 
கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். அருகில் உள்ள சிவன் அல்லது முருகன் கோவிலுக்கு சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவில், பால் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். 
 
மறுநாள் கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து குளித்து பூஜையின்போது முருகன் துதிகளை அல்லது நமசிவாய மந்திரத்தை 12 முறை  ஜபிக்கவேண்டும்.
 
மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் கடவுளை மனமுருகி வேண்டிக்கொண்டு சிறிது பழச்சாறு அருந்தி விரதத்தை  முடிக்கவேண்டும். ஆனால் அன்று அரிசி உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி இவற்றை உண்ணலாம்.
 
விளக்கேற்ற வேண்டிய நேரம்:
 
கார்த்திகை தீபத்திருநாளன்று மாலை வேளையில் 5:30 மணிக்குமேல் வீட்டில் விளக்கேற்ற வேண்டும். வாசனையுள்ள மலர்களைத் தொடுத்து அதை இறைவனுக்கு சமர்பித்து வணங்கவேண்டும்.
 
கார்த்திகை தீபத் திருநாள் நம் வீட்டுள்ள இருளை அகற்றி ஒளிமயமான வாழ்வைக் கொடுக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருநாளை விரதமிருந்து வழிபட்டால் வளமான வாழவை பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (09-12-2019)!