Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முரசொலி கட்டுரையால் ரஜினி அதிரடி: 20 தொகுதிகளில் போட்டியிட முடிவா?

Webdunia
திங்கள், 29 அக்டோபர் 2018 (06:59 IST)
அரசியலுக்கு வருவதாக அறிவித்த நாளில் இருந்து இன்று வரை திமுக குறித்தோ, அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தோ ரஜினி இதுவரை விமர்சனம் செய்தது கிடையாது. ஆனால் அவரை சீண்டிவிடும் வகையில் முரசொலியில் ஒரு கட்டுரை சமீபத்தில் வெளிவந்தது. இந்த கட்டுரைக்கு பின் திமுகவுக்கு தான் யார் என்பதை காண்பிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முரசொலி கட்டுரைக்கு முன் வரை 20 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யாத ரஜினிகாந்த், தற்போது இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால்  திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக முரசொலியில் ஒரு விளக்கம் அளித்தது.

தற்போதைய நிலையில் 20 தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் ரஜினி களமிறங்கினால் நிலைமை தலைகீழாக மாறும் என்று திமுக தரப்பினர்களே அஞ்சுகின்றனர். இதனால் ரஜினியை சமாதானப்படுத்தும் முயற்சியும் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

கணவரால் குழந்தையில்லை.. ஆத்திரத்தில் பிறப்புறுப்பை வெட்டிய 2வது மனைவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments