Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே ஜெயில்தான்: அதிமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

Advertiesment
ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே ஜெயில்தான்: அதிமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை
, செவ்வாய், 30 அக்டோபர் 2018 (09:40 IST)
ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே இப்போது அமைச்சர்களாக இருப்பவர்கள் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் திமுக தொண்டர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். ஆட்சிக்குக் வந்தவுடன் வருடக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ, நாள் கணக்கிலோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. திமுக ஆட்சி அமைத்த அடுத்த வினாடியே இன்றைக்கு அமைச்சர்களாக இருப்பவரகள் சிறையில் இருப்பார்கள் என்று ஆவேசமாக பேசினார்.

மேலும் ‘உள்ளாட்சித் தேர்தலை நடந்தக் கூடாது' என்று தி.மு.க. தான் நீதிமன்றத்திற்கு சென்று தடை உத்தரவு பெற்றிருப்பதாக முதல்வர் ஒரு தவறான தகவலை கூறி வருகிறார். திமுக நீதிமன்றத்திற்கு சென்றது தேர்தலை நிறுத்துவதற்கு அல்ல, முறையாக தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் என்று ஸ்டாலின் கூறினார்

அண்ணா காலத்தில் கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்று இருந்த தமிழகம் இன்று எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கமிஷன்-கலெக்சன்-கரப்ஷன் என்று மாறியுள்ளது என்றும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடியே ஜெயில்தான்: அதிமுக அமைச்சர்களுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை