Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஸ்டாலின் முதல்வர்; டிடிவி துணை முதல்வர் –ஜெயக்குமார் சொல்லும் புதிய கூட்டணி

Advertiesment
ஸ்டாலின் முதல்வர்; டிடிவி துணை முதல்வர் –ஜெயக்குமார் சொல்லும் புதிய கூட்டணி
, திங்கள், 29 அக்டோபர் 2018 (16:18 IST)
ஸ்டாலினும் டிடிவி தினகரனும் சேர்ந்து அதிமுகவின் ஆட்சியைக் கலைக்க முயற்சி செய்வதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமாரின் ஆடியோ சர்ச்சை விவகாரம் இப்போதுதான் கொஞ்சம் அடங்கியுள்ளது. அதனால் வழக்கம்போல ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களை சந்திக்க ஆரம்பித்துள்ளார்.

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதான நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் விவகாரத்தின் வழக்கை சிபிஐ விசாரிக்க இன்று உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது அது சம்மந்தமாகப் பேசிய ஜெயக்குமார் ‘முதல்வார் ஏற்கனவே கூறியது போல எந்த விசாரனைக்கும் தயாராக உள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவில் உள்ள அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி எனக்கூறி வருகிறார். இதைக்கேட்டு எங்களுக்குப் புளித்துப்போய் விட்டது. 2021 வரை இதையே சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியதுதான். 2021-லும் அதிமுகதான் ஆட்சியை அமைக்கும். ஸ்டாலினும் தினகரனும் சேர்ந்து நான் முதல்வராகவும் நீங்கள் துணை முதல்வராக இருந்துகொள்ளலாம் என ரகசியக் கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியைக் கலைக்க நினைத்தார்கள். அதை அதிமுக வெற்றிகரமாக முறியடித்து ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது’ என்றார்.

மேலும் சேலம் சிறுமி கொலை குறித்து பதிலளித்த ஜெயக்குமார் ‘குற்றவாளி யாராக இருந்தாலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தரப்படும். ஏற்கனவே தஷ்வந்த் வழக்கில் எங்களரசு விரைவாக செயல்பட்டு குற்றவாளிக்குத் தூக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது’ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 பெண்களை கற்பழித்த வழக்கில் ஹாலிவுட் நடிகர் காலன் வால்கர் கைது