பிக்பாஸ் சீசன் 4! கமல் இருக்காரா? மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகுமா ?

வியாழன், 26 மார்ச் 2020 (16:30 IST)
பிக்பாஸ் சீசன் 4 ஐ கமல் தொகுத்து வழங்கமாட்டார் என்ற செய்தி உண்மையில்லை எனத் தெரியவந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியின் அடையாளமாக மாறியுள்ளார். அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 ஐ இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகள் மற்றும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் கமல் தொகுத்தளிக்க மாட்டார் என செய்திகள் வெளியாகின. அதே போல இந்தியில் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வரும் கலர்ஸ் நிறுவனமே தமிழிலும் ஒளிபரப்பும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த இரு தகவல்களையும் விஜய் டிவி தரப்பு தற்போது மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. வழக்கம்போல கமல் தொகுத்து வழங்க விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் எல்லோரும் பயன்படுத்துவதால் இந்த முடிவை எடுக்கிறோம் – அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு !