Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

50 லட்சம் பரிசு.. 70 நாள்: சம்பளம்!.. பிக்பாஸில் மொத்தமா அள்ளிய திவ்யா!....

Advertiesment
biggboss

BALA

, திங்கள், 19 ஜனவரி 2026 (07:57 IST)
தமிழில் ஏற்கனவே பிக்பாஸ் 8 சீசன்கள் முடிந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 9வது சீசன் துவங்கியது. இந்த சீசனையும் விஜய் சேதுபதியே நடுவராக நடத்தினார்.இதில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜன் அவரை மனைவி சாண்ட்ரா, திவ்யா கணேஷ் மற்றும் அமித் ராகவ் ஆகி்யோர் உள்ளே வந்தார்கள். உள்ளே அந்தவுடன் அவர்கள் ஏற்கனவே இருந்த போட்டியாளர்கள் மீது விமர்சனங்களை வைத்தனர். குறிப்பாக பார்வதி-கம்ரூதின் இடையே உள்ள உறவு தொடர்பாக திவ்யா பேச  ஆரம்பத்திலேயே அவர்களுக்கும், திவ்யாவ்வுக்கும் இடையே முட்டிக்கொண்டது.

ஆனாலும், திவ்யா திறமையாக விளையாடி வீட்டில் இருந்த எல்லா பிரச்சனைகளுக்கும் குரல் கொடுத்தார். அவரின் விளையாட்டையும் சரியாக ஆடினார். இந்நிலையில் தான் நேற்று நடந்த கிராண்ட் ஃபைனல் போட்டியில் திவ்யா வெற்றி பெற்றதாக விஜய் சேதுபதி அறிவித்தார்.

பிக்பாஸ் வின்னரக திவ்யாவுக்கு முதல் பரிசு 50 லட்சம் பரிசு கிடைக்கும். அதில் வரி போக 35 லட்சம் கிடைக்கும்.. அதோடு பிக் பாஸ் வீட்டில் திவ்யா நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் சம்பளம் பேசப்பட்டிருந்தது. அதன்படி 77 நாட்கள் தங்கி இருந்ததால் அவருக்கு 23 லட்சத்து 10 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் எனவே அவருக்கு பணமாக 58 லட்சத்து 10 ஆயிரம் கிடைக்கும். மேலும், அவருக்கு 19 லட்சம் மதிப்புள்ள ஒரு மாருதி சுசுகி சொகுசு காரும் பரிசாக கிடைக்கும். இதையடுத்து,
சமூகவலைகளில் பலரும் திவ்யாக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனநாயகனோடு போட்டி போடல!.. சொன்னா நம்புங்கப்பா!.. சுதாகொங்கரா ஓப்பன்!...