Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி!

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please டைட்டிலை தட்டித்தூக்கிய ஜோடி!

J.Durai

, செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (09:02 IST)
இந்தியாவின் மிகவும் பிரபலமான டேட்டிங் ரியாலிட்டி ஷோவான MTV Splitsvilla X5: ExSqueeze Me Please, கிராண்ட் ஃபினாலே வெற்றிகரமாக முடிவடைந்து ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. 
 
NEWME மற்றும் Fixderma Shadow Sun Protection மற்றும் Wild Stone Deos மற்றும் வாசனை திரவியங்கள் இணைந்து வழங்கிய 15வது சீசனை ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி ஜோடி வெற்றி பெற்று டைட்டிலை தட்டிச் சென்றது. உண்மையான காதல் அனைத்து தடைகளையும் கடந்து, நிகழ்ச்சியின் உணர்வை வெளிப்படுத்தும் என்பதை அவர்களின் பயணம் காட்டுகிறது. 
 
இறுதி எபிசோட் உணர்ச்சிகளின் ரோலர்கோஸ்டராக இருந்தது. இது மூன்று தனித்துவமான ஜோடிகளைக் கொண்டிருந்தது: லவ் மேட்ச் ருஷாலி-ஹர்ஷ், ஐடியல் மேட்ச் அக்ரிதி-ஜஷ்வந்த் மற்றும் பவர் மேட்ச் காஷிஷ்-திக்விஜய். பல சவால்கள் இருந்தபோதிலும், ஜஷ்வந்த் மற்றும் அக்ரிதி உறுதியுடன் இருந்தனர், அவர்களின் அசைக்க முடியாத பிணைப்பால் இதயங்களை வென்றனர். அவர்களின் வெற்றி அவர்களின் காதலுக்கும் உறுதிக்கும் சான்றாக அமைந்தது. வெறும் 5 நொடிகளில் வெற்றியை ஹர்ஷ் - ருஷாலி ஜோடி தவற விட்டது. அவர்களும், கடுமையாக போராடியது ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்தது.
 
இந்த சீசன் முதல் முறையாக காதல் மற்றும் துரோகம் தீம்களுடன் கூடுதல் உற்சாகத்தை சேர்த்தது. முன்னாள் போட்டியாளர்களை பிரதான வில்லாவில் கொண்டு வந்து நாடகத்தை கிளப்புவதில் குறும்பு மேக்கர் உர்ஃபி முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் ஜோடிகளுக்கு இடையிலான தீவிர அமர்வுகள் மற்றும் ஜாரா ஜாரா ஸ்க்வீஸ் மீ போன்ற சவால்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.
 
இந்த சீசனில் ஏகப்பட்ட ஸ்பெஷல் கெஸ்ட் வந்தது நிகழ்ச்சிக்கு கவர்ச்சியை சேர்த்தது. ஊர்வசி ரவுடேலா, ஜஸ்டின்-சாக்ஷி, ஜன்னத்-ஃபைசு மற்றும் கிராண்ட் ஃபினாலேவுக்கு வந்த முனாவர் ஃபருக்கி போன்ற நட்சத்திரங்கள் வில்லாவை அலங்கரித்தனர். சுபி மற்றும் சிவெட்டின் ரிட்டர்ன் போன்ற வைல்டு கார்டு சம்பவங்களும் வில்லாவில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை கொண்டு வந்தது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்தது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா!