தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமா மட்டுமின்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான சௌந்தரராஜா இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் ஏராளமான மரங்களை நட்டு வருகிறார். அந்த வகையில், சௌந்தரராஜா தனது பிறந்தநாள் மற்றும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் 8 ஆம் ஆண்டு விழாவை நேற்று கொண்டாடினார். இதையொட்டி காஞ்சிபுரம் வாலாஜாபாத்தில் அருகே உள்ள தன்னூர் கிராமத்தில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் உறுப்பினர்களுடன் சேர்ந்து 240 மரக்கன்று நட்டார்.
தமிழகம் முழுவதும் 500 மரக்கன்றுகள் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை சார்பாக நடப்பட்டது.
6 மாதம் தொடர்ச்சியாக 5000 மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளார். நடுவது மட்டுமில்லாமல் அதை பராமரிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இதுதவிர மரங்களை நடுவதற்கும் தனது அறக்கட்டளை உதவி செய்யும் என்று சௌந்தரராஜா அறிவித்துள்ளார். மக்கள் தங்களது ஊரில் மரங்களை நடுவதற்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தால், அவரது குழுவினர் குறிப்பிட்ட ஊரில் மர்க்கன்று நடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.
நடிகர் சௌந்தரராஜா மீது கொண்ட அன்பிற்கும், சமூக அக்கறைக்கும் அவரது நண்பர் ஜேப்பியார் பேரன் ஜெய்குமார் (சத்தியபாமா பல்கலைக்கழகம்) மற்றும் அவரது மனைவி Dr சரண்யா ஜெய்குமார் ( Education Phsycolosit ) விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றை பிறந்த நாள் பரிசாக அளித்துள்ளனர்.