Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குக் வித் கோமாளி சீசன் 7: புதிய நடுவராகக் களமிறங்கும் 90ஸ் நாயகி ரோஜா..

Advertiesment
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி மட்டுமே. இந்த நிகழ்ச்சி வழக்கமான, சீரியஸான சமையல் நிகழ்ச்சியாக இல்லாமல், சமையலோடு சேர்த்து முழுக்க முழுக்க காமெடி அதகளங்களைக் கொண்டு செல்லப்படும் இந்த நிகழ்ச்சி என்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகம்.
 
குக் வித் கோமாளி 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன்  துவங்க உள்ளது.இதற்கான ப்ரமோ வீடியோ வெளியானது. வழக்கமாக நிகழ்ச்சியின் ஆஸ்தான நடுவர்களான செஃப் தாமு, கடந்த சீசன்களில் கலக்கிய மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் செஃப் கௌஷிக் ஆகியோருடன் இணைந்து, தற்போது 4-வது நடுவராகப் பிரபல முன்னணி நடிகை ரோஜா களமிறங்கியுள்ளார். இதற்கான பிரம்மாண்ட அறிமுகம் இன்று வெளியான ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்று சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
 
அவரது இந்த நீண்ட கால அனுபவமும், கலகலப்பான நகைச்சுவை உணர்வும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’துரந்தர் 3’ வரும் ஜூன் மாதம் ரிலீஸா? வெளியான வைரல் வீடியோவால் பரபரப்பு..!