Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிதுனம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)

Advertiesment
மிதுனம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)
, சனி, 13 பிப்ரவரி 2021 (16:18 IST)
(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்  திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் ராஹூ - ரண  ருண ரோக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
 

பலன்:
சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்புடன் இருக்கும் மிதுன ராசி அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரியங்கள் மனதுக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் நடந்து  முடியும். கடன் சுமை குறையும். எதிர்ப்புகள் அகலும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய தோன்றும். யாருக்காவது உத்திரவாதம் தரும்போது  கவனமாக  இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும்.
 
தொழில், வியாபாரத்தில் கடினமான முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்களால் திருப்தி ஏற்படும்.   கடன் தொல்லைகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பதவிகள் தாமதமாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல  பலன் ஏற்படும்.
 
வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும்  கிடைக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்க பெறுவீர்கள்.
 
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது.
 
கலைத்துறையினருக்கு ராசியில் சனி  இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி  இருக்கலாம்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன்  வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற ஆசிரியர்களின் ஆலோசனையை கேட்டு பயன் பெறுவது நல்லது. முயற்சிகள் வெற்றி பெறும்.
 
பரிகாரம்: திருவாசகம் படித்து வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மனதில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச்: 3, 4
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்: 9, 10.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிஷபம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)