Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மேஷம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)

Advertiesment
மேஷம்: மாசி மாத ராசி பலன்கள் (2021)
, சனி, 13 பிப்ரவரி 2021 (16:00 IST)
மேஷம் (அஸ்வினி, பரணி,  கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் கேது -  தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, சுக்ரன், சனி - லாப ஸ்தானத்தில் சூர்யன், சந்திரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
நடக்காது என்று எதையும் நினைக்காமல் எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற துடிப்புடைய மேஷ ராசி அன்பர்களே இந்த மாதம் எதையும் ஒரு முறைக்கு  பலமுறை  ஆலோசித்து செய்வது நல்லது, மனம் நிலை கொள்ளாமல் ஏதாவது சிந்தித்து கொண்டே இருக்கும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.   குருவால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும்.
 
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். தேவையான சரக்குகள் கையிருப்பில் இருக்கும். புது நபர்கள் கூறும் வியாபாரம் தொடர்பான விஷயங்களில்  முடிவு எடுக்கும் போது கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவிகள், அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களது பணி  திறமையால் மேல் அதிகாரிகள் திருப்தி அடைவார்கள்.
 
குடும்பத்தில்  இருப்பவர்களுடன் கோபமாக  பேசும் சூழ்நிலை ஏற்படும். கவனமாக இருப்பது நல்லது. மனைவி குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாக லாம். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வயிறு தொடர்பான நோய் வந்து நீங்கும்.
 
பெண்களுக்கு சதா எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். எந்த காரியத்திலும் முடிவு எடுக்கும்  முன்பு தீர ஆலோசிப்பது நல்லது.
 
கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக  ஆலோசனை நடத்தவும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.  அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும்  மந்தமாக நடக்கும். 
 
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகபடுத்தி படிப்பது நல்லது.
 
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்ய குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட தினங்கள்: பிப்ரவரி: 26, 27, 28
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச்: 5, 6.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரத நாட்கள் என்ன...?