Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரத நாட்கள் என்ன...?

Advertiesment
மாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் விரத நாட்கள் என்ன...?
விநாயகர் விரதம்: மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். மாசி மாதத்து சங்கடஹர சதுர்த்தி மிக விசேஷம். அந் நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

மகா சிவராத்திரி: மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். மாசி மாதம் சிவனுக்கு உரிய மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் திருவிளையாடல்கள் பல புரிந்தது மாசிமாதத்தில் தான். மாசி மாதத்தில் மந்திர உபதேசம் பெறுவது  சிறந்ததாகத் கருதப்படுகிறது.
 
மாசி அமாவாசை: மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர். மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை திருவிழா நடைபெறுகிறது. 
 
அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும்  வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல்வேறு சிறப்புகள் கொண்ட மாசி மாதத்தில் வரும் விஷேச நாட்கள் எவை...?