சிங்கிளாய் வந்து வெளுத்து வாங்கும் த்ரிஷா – கர்ஜனை ட்ரெய்லர்

புதன், 21 ஆகஸ்ட் 2019 (20:27 IST)
கோலிவுட் குயின் த்ரிஷா நடித்து விரைவில் ரிலீஸாக இருக்கும் “கர்ஜனை” திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களை மையமாக வைத்து படங்கள் உருவாக்குவதே வழக்கம். இந்த வழக்கத்தை உடைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களும் வர தொடங்கியுள்ளன. தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து தனக்கென ஒரு அடையாளத்தையும், ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியவர்கள் நயன்தாரா மற்றும் த்ரிஷா.

நயன்தாரா அளவுக்கு சிங்கிளாக நடித்து ஹிட் கொடுக்க முயற்சித்து வருகிறார் த்ரிஷா. அந்த முயற்சியில் விரைவில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான் “கர்ஜனை”. இந்த படத்தை திகில் ஆக்‌ஷன் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் சுந்தர் பாலு.

அமித், வம்சி கிருஷ்ணா, ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் 600 ரூபாய் புடவை அணிந்து வந்த கங்கனா ரனாவத் - சிம்ப்ளிஸிட்டியை பாராட்டும் ரசிகர்கள்!