Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யோகி பாபுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!

யோகி பாபுவை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்!
, புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:06 IST)
தமிழ் சினிமாவின் தற்போதைய காமெடி கிங் யோகி பாபு எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.


 
கோலிவுட்டில் ஒரு காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த காமெடி பிரபலங்களான சந்தானம், சூரி போன்றவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு வடிவேலுவுக்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்த்திழுத்தவர் நடிகர் யோகி பாபு. 
 
சமீபகாலமாக வெளிவரும் பெரும்பான்மையான படங்களில் யோகி பாபுவின் காமெடி இடம்பெற்றுவிடுகிறது. அந்த அளவுக்கு அவரது யதார்த்தமான நடிப்பும்,  உருவ அமைப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி கொண்டே வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் வெளிவந்த கோமாளி படத்தில் யோகி பாபுவின் காமெடி பலராலும் பாராட்டப்பட்டு ரசித்து பார்க்கப்பட்டது. அதையடுத்து வருகிற ஜூன் 28ம் தேதி "தர்மபிரபு" திரைப்படம் வெளிவரவிருக்கிறது. 
 
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை யோகி பாபு ரஜினிக்கு திரையிட்டு காட்டினாராம். படத்தை பார்த்த ரஜினிகாந்த் யோகிபாபு மற்றும் படத்தின் இயக்குனர் முத்துக்குமரன் இருவரையும் வெகுவாக பாராட்டினாராம். அரசியல் கேலி, கிண்டல் என படத்தை சுவாரஸ்யமாக எடுத்துள்ளீர்கள் கூறி வாழ்த்து தெரிவித்தாராம். தற்போது யோகி பாபு ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டுமொரு காதல் - கடுப்பாகி ட்ரோல் செய்யும் ஆர்மிஸ்!