Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

600 ரூபாய் புடவை அணிந்து வந்த கங்கனா ரனாவத் - சிம்ப்ளிஸிட்டியை பாராட்டும் ரசிகர்கள்!

Advertiesment
600 ரூபாய் புடவை அணிந்து வந்த கங்கனா ரனாவத்  - சிம்ப்ளிஸிட்டியை பாராட்டும் ரசிகர்கள்!
, புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:03 IST)
‘தாம் தூம் ‘ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு  பரிட்சியமான நடிகை கங்கனா தமிழில் பெரிதாக பேசபடவில்லை என்றாலும் இந்தி திரையுலகில் தற்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். தொடர்ச்சியாக தான் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.


 
இதற்கிடையில் அவ்வப்போது கவர்ச்சிக்கு தாராளம் காட்டியும் அவ்வப்போது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துவருகிறார். அதே நேரத்தில் ஒரு பெரிய நடிகையை என்ற எந்த வித பந்தாவும் காட்டாமல் சிம்பிளாக இருப்பதுதான் இவரது தனித்துவமான அடையாளம். தற்போது அதை நிரூபிக்கும் வகையில் கங்கனா எளிமையான காட்டன் புடவையை அணிந்து அனைவரையும் வியக்க வைத்துள்ளார். 
 
ஜெய்பூரைச் சுற்றி பார்க்கச் சோலோவாக பயணம் செய்த கங்கனா அதற்காக விமானநிலையம் வந்தபோது அவர் கட்டியிருந்த புடவை தான் பலரையும் வியக்கவைத்தது. ஆம் , கொல்கத்தா நெசவாளர்களிடமிருந்து வாங்கிய அந்த காட்டன் புடவை வெறும்  600 ரூபாய் தானாம். இருப்பினும் அந்த புடவைக்கு ஈடாக கிவென்ச்சி (givenchy) பிராண்டின் ஓவர் கோட் மற்றும் அதற்கு பொருத்தமான பிரடா பேக் அணிந்திருந்ததால்  சிம்பிலான புடவையும் ரிச் தோற்றத்தில் மிகவும் கட்சிதமாக பொருந்திவிட்டது. 

webdunia

 
மேலும் அவரது ஹேர்ஸ்டைல் , சன் கிளாஸ் உள்ளிட்டவை செம்ம ஸ்டலிஸாக எடுத்து காட்டியுள்ளது. தற்போது இந்த புகைப்படங்ககள் சமூக வலைத்தளங்கில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அடுத்து வருவது ’நோ டைம் டூ டை ’ : ரசிகர்கள் மகிழ்ச்சி