ஒன்லி 18 ப்ளஸ்...சம்பவம் செய்த யோகி பாபுவின் "பப்பி" ட்ரைலர்!

வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (17:17 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் யோகி பாபு தற்போது "பப்பி" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


 
தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதற்கிடையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகருக்கு இணையாக நித்தியானந்தா சம்மந்தப்படுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பிரச்னையினாலே படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்தது. 
 
இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியானது. "ப்ளூ பிலிம் பார்க்கும் ஹீரோவின் அளப்பறைகளையும், காதலனால் கர்ப்பமாகும் ஹீரோன்..அவர்களுடன் சேர்ந்து ட்ராவல் செய்யும் யோகி பாபு என படம் முழுக்க முழுக்க 18+ இளசுகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்த்த சிங்கிள் பாய்ஸ் பப்பி பட டீமிற்கு சாபம் விட்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க் - ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்!