தனது குட்டி குழந்தையின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சுஜாவருணி!

சனி, 14 செப்டம்பர் 2019 (12:59 IST)
கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி.  பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸில் பங்குபெற்ற பிறகுதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார். 


 
பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்து சில மாதங்களில் கர்ப்பமான சுஜா வருணிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 
 
இந்நிலையில் தற்போது தனது குழந்தை மற்றும் கணவருடன் ஃபேமேலி போட்டோஷூட் நடத்தியதோடு, குழந்தையின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 


 
அதில் , " அனைவருக்கும் வணக்கம்! எங்கள் குடும்பத்திற்கு இன்று ஒரு நல்ல நாள் ... இந்த நல்ல நாளில்  என் மகன் பிறந்ததையும் , அவனுக்கு பெயர் சூட்டியதையும் எண்ணி  மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனக்கு இப்படி ஒரு அழகான குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் அத்வைத்" என மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ரொமான்ஸில் உச்சத்தை தொட்ட விஜய்சேதுபதி - ட்ரெண்டான சங்கத்தமிழன் பாடல் வீடியோ!