Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 18 April 2025
webdunia

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க் - ட்ரோல் செய்த நெட்டிசன்ஸ்!

Advertiesment
Bigg boss 3
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (15:54 IST)
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது. இறுதி கட்டத்தை நெருங்க நெருங்க வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தராக வெளியேறி வருகின்றனர். நேற்று கவின் வெளியேறியதை அடுத்தது தற்போது லொஸ்லியா ,ஷெரின் ,தர்ஷன் , சாண்டி , முகின் உள்ளிட்ட 5 நபர்கள் இருக்கின்றனர். 


 
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள மூன்றாவது ப்ரோமோவில் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ் " கண்ணாடி பெட்டியில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள தெர்மக்கோள்களை எதிரில் வைக்கப்பட்டுள்ள பவுலில் நிரப்ப வேண்டும் என்பது தான் எந்த டாஸ்க். இதை அறிவித்த உடன் போட்டியாளர்கள் அனைவரும் களத்தில் இறங்கி வெறித்தனமாக டைட்டிலை வெல்லவேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடுகின்றனர். 
 
இந்த ப்ரோமோ வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் " எங்கள் தலைவன் செல்லூர்ராஜு டாஸ்கை பிக்பாஸ் காப்பியடித்து விட்டார் என கூறி கிண்டலடித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் இந்த டாஸ்க் ரொம்ப கஷ்டமா இருக்கும் நாளைக்கு லெமன் ஸ்பூன் டாஸ்க் குடுங்க சிறப்பா விளையாடிட்டு 50 லட்சத்தை வாரிட்டு போவாங்க என கடுப்பில் கலாய்த்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இந்தி மொழி’திட்டத்துக்கு ஆதரவளித்த பிரபல தயாரிப்பாளர் !