"பொன்மகள் வந்தாள்" ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த சூர்யா!

புதன், 20 மே 2020 (08:24 IST)
கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போதைக்கு திரையரங்குள் திறக்க வாய்ப்பில்லை என்றும், இன்னும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்தே திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் ஓடிடி ப்ளாட்பாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டன. அவற்றில் முதல் படியாக ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி பிளாட்பாரத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்து பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் தான் பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் மே 21-ம் தேதி (நாளை)  வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ஜோதிகா ரசிகர்கள்  மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Delay in Justice is Injustice!! #PonmagalVandhal trailer out on 21st May #PonmagalVandhalOnPrime@PrimeVideoIN#Jyotika @fredrickjj @rparthiepan @ppothen @actorthiagaraja @rajsekarpandian @govind_vasantha @2D_ENTPVTLTD @SonyMusicSouth @editorNash pic.twitter.com/rX7gG783Ux

— Suriya Sivakumar (@Suriya_offl) May 19, 2020

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் தந்தையின் பிறந்தநாளில் மனம் உருகிய அதர்வா - எமோஷனல் பதிவு!