Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோதிகா பேசின பிறகு தான் மருத்துவமனையை சரி செய்தாங்க - இயக்குனரின் மூலம் வெளியான உண்மை!

Advertiesment
ஜோதிகா பேசின பிறகு தான் மருத்துவமனையை சரி செய்தாங்க - இயக்குனரின் மூலம் வெளியான உண்மை!
, வியாழன், 30 ஏப்ரல் 2020 (08:10 IST)
சமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தஞ்சையின் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும், அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டும் ஜோதிகா பேசியிருக்கலாம் என்றும் தேவையில்லாமல் தஞ்சை பெரிய கோவில் குறித்து அவர் பேசியது தவறு என்றும் பலர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இதையடுத்து ஜோதிகாவுக்கு நெருக்கமான பல திரையுலக பிரபலங்கள் ஜோதிகா எந்த உள்நோக்கத்தோடும் இதனை     பேசவில்லை என்றும் அவர் பேசியது சரிதான் என்றும் கூறி அவருக்கு ஆதரவாக வருகின்றனர். மேலும் இதுகுறித்து கணவர் சூர்யா நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு முகம் தெரியாத எத்தனையோ நபர்கள் எங்களுக்கு ஆதரவளித்து பேசியதற்கு நன்றி என கூறிருந்தார். இதையடுத்து இந்த விவாகரத்திற்கு முறுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது இது குறித்து பொன்மகள் வந்தால் படத்தின் இயக்குனர்  JJ Fredrick பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் " இந்த படத்தின் ஷூட்டிங் நடந்தபோது இந்த மருத்துவமனை விவகாரம் நடந்தது. இது குறித்து அப்போதே நடிகை ஜோதிகா மிகுந்த வருத்தப்பட்டார். மேலும், ஜோதிகா பேசிய பிறகு தான் அரசு அதிகரால் அந்த மருத்துவனை ஆய்வு செய்து சரி செய்தனர். ஜோதிகா சூர்யாவின் குடும்பம் அகரம் மட்டுமின்றி பல்வேறு உதவிகளை முன்வந்து செய்து வருவது உங்களுக்கு தெரியாது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல பாலிவுட் நடிகருக்கு மூச்சுத்திணறல்: மும்பை மருத்துவமனையில் அனுமதி!