Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மர்மம்... கொலை... திகில் - மிரட்டும் IPC 376 ட்ரைலர்!

Advertiesment
மர்மம்... கொலை... திகில் - மிரட்டும் IPC 376 ட்ரைலர்!
, வெள்ளி, 3 ஜூலை 2020 (10:16 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.

ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த "இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா " படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். சிபிராஜ் நடிப்பில் உருவான கபடதாரி படத்திலும் நடித்துள்ளார் நந்திதா.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.  ஐபிசி 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என மொத்த மசாலாக்களை அடங்கிய இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார்.  ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படமாக உருவாகியுள்ள இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சமீபத்தில் தான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்தது.  தற்ப்போது இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. நந்திதாவின் திரைப்பயணத்தில் இந்த படம் பெரும் பங்காற்றும் என நிச்சயம் கூறலாம். இதோ அந்த ட்ரைலர் வீடியோ.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெரும் பாலிவுட் நடன இயக்குனர் மாரடைப்பால் மரணம்: