Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பழம்பெரும் பாலிவுட் நடன இயக்குனர் மாரடைப்பால் மரணம்:

Advertiesment
பழம்பெரும் பாலிவுட் நடன இயக்குனர் மாரடைப்பால் மரணம்:
, வெள்ளி, 3 ஜூலை 2020 (09:56 IST)
பழம்பெரும் பாலிவுட் நடன இயக்குனர் மாரடைப்பால் மரணம்:
பாலிவுட்டில் கடந்த சில மாதங்களாக சுஷாந்த் உள்பட பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மரணம் அடைந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நடன இயக்குனர் சரோஜ்கான் அவர்கள் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72
 
கடந்த 40 ஆண்டுகளாக பாலிவுட் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் நடன இயக்குனராக வலம் வந்தவர் சரோஜ்கான். இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்து வந்தார் என்பதும் தமிழில் ரஜினிகாந்த் நடித்த, மணிரத்னம் இயக்கிய ஒரு சில படங்களுக்கும் இவர் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையிலும் கடந்த மாதம் 17 ஆம் தேதி சரோஜ்கான் அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது மகன் ராஜூகான் தெரிவித்துள்ளார். மேலும் சரோஜ்கான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
இந்த நிலையில் மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரோஜ்கான் அவர்களுக்கு திடீரென இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் உயிரிழந்தார் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்பட்ட உயிரிழந்த தகவல் வெளியே தெரிந்தவுடன் பாலிவுட் திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடன இயக்குனர் சரோஜ்கான் 3 முறை தேசிய விருது பெற்றவர் என்பதும் அது மட்டுமன்றி பல விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உடல் எடை குறைத்து ஹாட் அழகியான ஐஸ்வர்யா தத்தா - யாஷிகா கொஞ்சல்!