Publish Date: Tue, 14 Mar 2023 (19:33 IST)
Updated Date: Tue, 14 Mar 2023 (19:36 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான நானி இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் தசரா பான் இந்தியா படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
இவர்களுடன், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.வருகிற மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்க செய்துள்ளது. வீடியோ லிங்க்: