Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'தசரா' படத்தில் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

thasara
, சனி, 11 மார்ச் 2023 (21:33 IST)
நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள தசரா திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நானி. இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா. இவருடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சாய்குமார், பூர்ணா, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

ஶ்ரீ லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்த படம் பான் இந்தியா ரிலீஸாக மார்ச் 30 ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில்,  சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வெளியானது.

இப்படத்தின் முதல் சிங்கில் ஓரி வாரி கடந்த 13 ஆம் தேதி  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இன்று இதன் தமிழ் பாடலான தீக்காரி வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், தசரா படத்தின் டிரெயிலர் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கண்ணம்மாவா இது ஃபாரின் ஹீரோயின் மாதிரி பளபளன்னு ஆகிட்டாங்களே - ரீசென்ட் போட்டோஸ்!