Publish Date: Sat, 20 Apr 2019 (17:00 IST)
Updated Date: Sat, 20 Apr 2019 (17:08 IST)
கிராமத்து பின்னணியில் வித்தார்தின் ஆயிரம் பொற்காசுகள் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் ஆயிரம் பொற்காசுகள் படம் உருவாகி இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் விநியோகிஸ்தராகவும் சிறந்து விளங்கி வரும் கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜோஹன் இசையமைக்ககும் இப்படத்திற்கு பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள "ஆயிரம் பொற்காசுகள்" படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாக கொண்ட கதை. தொடக்கம் முதல் கடைசி காட்சி வரை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் இப்படத்தில் கழிப்பறை தோண்ட சென்ற இடத்தில் விதார்த், சரவணன் கூட்டணிக்கு ஒரு புதையல் கிடைக்கிறது. அந்த செய்தி ஊர் முழுக்க பரவி ஊரே பங்கு கேட்கிறது.
அதன் பிறகு என்ன ஆகிறது என்பதே படத்தின் கதை. கிராமத்து மக்களின் பசுமையான வாழ்வியலையும், அன்றாட நிகழ்வுகளையும் பிண்ணனியாக கொண்டு மீண்டும் மைனா பாணியில் இப்படம் உருவாகியுள்ளது.
சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. குடும்ப பொழுதுபோக்கு படம் என்பதால் நிச்சயம் வித்தாரத்துக்கு இப்படம் வெற்றி கொடுக்கும் என நம்பப்படுகிறது.