Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மரண அலறல் கொடுக்கும் காஞ்சனா 3 ட்ரைலர்!

மரண அலறல் கொடுக்கும் காஞ்சனா 3 ட்ரைலர்!
, வியாழன், 28 மார்ச் 2019 (11:41 IST)
காஞ்சனா 3 படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை திகிலூட்டி வருகிறது.
 

 
திரையுலகில் கடின உழைப்பாலும் தன் திறமையாலும் முன்னுக்கு வந்தவர்களில் ஒருவர் நடிகர் ராகவா லாரன்ஸ். குரூப் டான்சராக தனது திரை பயணத்தை துவங்கி டான்ஸ் மாஸ்டராக, நடிகராக,  சிறந்த இயக்குனராக வலம் வருகிறார். இவரது நடிப்பிலும் இயக்கத்திலும் விசித்திரமான பல வெற்றி படங்களை தமிழில் கொடுத்துள்ளார்.
 
அப்படங்களில் ஒன்று தான் அவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “முனி”. இப்படத்தை தொடர்ந்து  இரண்டாம் பாகம் “காஞ்சனா” என்ற பெயரிலும்  பிறகு “காஞ்சனா-2 “ என வெளியான அனைத்து பாகங்களிலும்  லாரன்ஸ்  வெறித்தனமாக நடித்து உள்ளார். 
 
திகில் பட விரும்பிகள் ரசிக்கும் படங்களில் முக்கியமான காஞ்சனா பெரும் வரவேற்பை பெற்று சாதனையை படைத்து  ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றது. 
 
முனி 4 ஆன காஞ்சனா மூன்றாம் பாகமாக  காஞ்சனா 3 உருவாகியுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் கதாநாயகியாக நடிகை வேதிகா,ஓவியா நடித்துள்ளனர். மேலும் கோவை சரளா,  ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
 
ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் ட்ரைலர் சற்றுமுன் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மரண அலறல் கொடுத்து வருகிறது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

14 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியான நயன்தாரா!