Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹீரோவாக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.. இயக்குனர் இவரா?

Advertiesment
ஹீரோவாக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர் சாண்டி.. இயக்குனர் இவரா?
, வியாழன், 8 ஜூன் 2023 (07:52 IST)
நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்களுக்குப் பிறகு 7 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் இயக்கிய  கோல்டு திரைப்படம் வெளியாகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்த திரைப்படம் எந்தவித ப்ரமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. ஆனால் படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து உடனடியாக ஒரு ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அல்போன்ஸ் புத்ரன் அடுத்து தமிழில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. இது ஒரு காதல் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அல்போன்ஸ் இயக்கிய நேரம் மற்றும் பிரேமம் ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dance master sandy will act as hero under alphonse puthren direction

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா முழுவதும் திடீரென மூடப்பட்ட திரையரங்குகள்: என்ன காரணம்?