இசைஞானி இளையராஜாவின் 80 வது பிறந்த நாள் கடந்த 2 ஆம் தேதி கொண்டாடப்படப்பட்டது. அவருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன், இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையி, இன்று பாஜக தலைவர் அண்ணாமலை இளையராஜாவை நேரில் சந்தித்து உரையாடினார். இதுகுறித்து அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
இன்று மாலை, இசைஞானி இளையராஜா அவர்களது இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. திருவாசகத்தை சிம்பொனி வடிவில் தந்து, நம் மனதை இசையால் உருக்கிய கலைத்தாயின் தலைமகனை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
காலங்கள், கடவுள் பாடும் ராகங்கள் என்ற கவிஞர் கண்ணதாசன் வரிகளை, இசைஞானி அவர்களது இசை, இன்னும் பல நூறு தலைமுறைகளுக்கும் ஒலித்து மெய்ப்பிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.
மொழி, இனப் பாகுபாடின்றி, மக்களின் எல்லா வித உணர்வுகளுக்குமான தீர்வாக விளங்கும் இசைக் கடவுள், எங்கள் ராகதேவன் இளையராஜா அவர்கள், நீண்ட காலம் தமது இசையால் நம் அனைவரையும் ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.