Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது: ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன்..!

Advertiesment
இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது: ரயில் விபத்து குறித்து கமல்ஹாசன்..!
, சனி, 3 ஜூன் 2023 (13:09 IST)
இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து மாறியிருக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இதுகுறித்து கூறியிருப்பதாவது:
 
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே இரு பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததும்,  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
 
நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நம் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுமென விழைகிறேன். 
 
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த ரயில் விபத்து, இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், விபத்தின் தாக்கத்தில் இருந்து மீள தேச மக்கள் அனைவரும் துணை நிற்போம்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இன்றைய நவீனத் தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி அவர்!''-முதல்வர் முக.ஸ்டாலின் டுவீட்