ஜெய்பீம், குட்னைட், லவ்வர் மற்றும் குடும்பஸ்தன் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகராக உருவாகி வருகிறார் மணிகண்டன். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் 12 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபகாலமாக வந்த சிறு பட்ஜெட் படங்களில் எந்த படமும் பெறாத மிகப்பெரிய வெற்றியை பெற்று குடும்பஸ்தன் கலக்கியுள்ளது. இந்த படத்தில் மாணிக் சந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பல ஆண்டுகளுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற மை டியர் பூதம் சீரியலில் நடித்த அபிலாஷ்தான்.
அபிலாஷ் தற்போது திரைப்படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறாராம். குடும்பஸ்தன் படத்துக்கும் அவர்தான் அந்த பணியை செய்துள்ளார். அப்போது மாணிக்சந்த் கதாபாத்திரத்துக்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்து நடிக்க வைத்தார்களாம்.