அஜித் நடிப்பில் H வினோத் இயக்கும் AK 61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
 
									
			
			 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.
 
									
										
			        							
								
																	மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில்  H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
	தற்போது அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அவர் இல்லாத காட்சிகளை இயக்குனர் H வினோத் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் இந்த காட்சிகளை அவர் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.