Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

23 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன் ஷங்கர் ராஜா – ரசிகர்களின் வாழ்த்து மழை !

Advertiesment
23 ஆண்டுகளை நிறைவு செய்த யுவன் ஷங்கர் ராஜா – ரசிகர்களின் வாழ்த்து மழை !
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (15:16 IST)
தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா 23 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் யுவனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை சொல்லி வருகின்றனர்.

1997 ஆம் ஆண்டு இதே நாளில் சரத்குமார், ஊர்வசி மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் அரவிந்தன் என்ற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரே ஒரு காரணத்துக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த காரணம் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய 16 ஆவது வயதில் அந்த படத்துக்கு அவர் இசையமைத்து இருந்தார். அந்த படத்தில் எந்த பாடல்களும் பெரிய அளவில் ரசிகர்களைக் கவரவில்லை எனினும் அதன் பிறகு படிப்படியான வளர்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

குறிப்பாக 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ஆண்டுகளில் அவர் இசையில் வெளியான காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், பருத்தி வீரன் போன்ற படங்கள் ட்ரண்ட் செட்டர் படங்களாக அமைந்தன. இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள யுவனுக்கு இன்றோடு 23 ஆண்டுகளை நிறைவு செய்ய அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்கலில் வாழ்த்துமழைப் பொழிந்து வருகின்றனர். ரசிகர்களின் வாழ்த்துக்கு ‘உங்கள் அன்பு தான் என்னை மேலே செல்ல ஊக்கமளித்தது’ எனத் தனது டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆமாம், அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை - ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு!