Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹரிவராசனம் விருது பெற்ற இளையராஜா ...

Advertiesment
ஹரிவராசனம் விருது பெற்ற இளையராஜா ...
, புதன், 15 ஜனவரி 2020 (14:28 IST)
கேரள மாநில அரசு, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இன்று  ஹைரிவராசனம் விருது வழங்கப்பட்டது.
இந்திய சினிமாவில் இசை ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருப்பவர் இளையராஜா, இவர் ஆயிரம் படங்களுக்கு மேல் பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு  இசையமைத்துள்ளார்.  அவரது இசை சேவையைப் பாராட்டி  கேரள மாநில அரசு இவருக்கு ஹைரிவராசனம் விருது வழங்குவதாக கடந்த வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று கேரள மாநில அரசு இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கௌரவித்தது.
 
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் கேரள ஹரிவராசனம் என்ற பெயரில்  சபரிமலை சன்னிதானத்தில் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.
 
கேரள அரசும், திருவிதாங்கூர் தேவஸ்தானமும் இணைந்து இவ்வருடம் இந்த வருடத்துக்கு (2020)இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். +

எனவே இளையராஜாவுக்கு  சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் கேடயமும் ஒரு லட்சம் பணமும்  Worship Full Music Genius என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரவுடி பேபி பாடலுக்கு நடனம் ஆடிய மூதாட்டி... வைரலாகும் வீடியோ