Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆமாம், அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை - ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு!

Advertiesment
ஆமாம், அதை சொல்ல நான் வெட்கப்படவில்லை - ஸ்ருதி ஹாசனின் உருக்கமான பதிவு!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (14:34 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன். தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசன். சிறு வயது முதலே தான் ஒரு பாப் பாடகர் ஆகவேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருப்பவர். அதன் எதிரொலியாக தனது 6 வயதிலே தேவர் மகன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதி.  
 
சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்தார். காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன்  தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். 
 
இதற்கிடையில் ஸ்ருதிஹாசன்  தனது மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அழகு படுத்திக்கொண்டார். ஆனால், அவர் அதை வெளிப்படையாக கூறவில்லை. பின்னர் நெட்டிசன்ஸ் பலரும் சர்ஜரி செய்துள்ளர்களா..? குண்டா ஆகிட்டீங்க... இப்போ ஒல்லியா ஆகிட்டீங்க என அவ்வப்போது கிண்டலடித்து வந்தனர். இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் " மூன்று நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு கடந்த சில நாட்களாகவே மனதளவிலும், உடலளவிலும் என் கருணைமிக்க ஹார்மோன்களுடன் நான் நல்ல உறவினை மேற்கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால், அவ்வளவு எளிதானதல்ல ,  உடல் மாற்றங்கள் சுலபமல்ல என் பயணத்தை விவரிக்க முடியாது. இங்கே யாரும் அடுத்தவர்களின் நிலையைக் பற்றி முடிவெடுக்க பிரபலமானவர்கள் கிடையாது.
 
இது என்னுடைய வாழ்க்கை...  என்னுடைய முகம் என்பதை நான் மகிழ்ச்சியாக கூறுவேன். ஆமாம்,  நான் ஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறேன். அதற்காக நான் அசிங்கப்பட இல்லை. அதை சொல்வதிலும் நான் வெட்கப்படவில்லை. நான் இதை எப்போதாவது விளம்பரப்படுத்தி இருக்கிறேனா ? இல்லை அதற்கு எதிராக நான் இருக்கிறேனா ? கிடையவே கிடையாது...  நான் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. நாம் செய்யும் மிகப்பெரிய செயல் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவரை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான். அன்பை பகிருங்கள் என்னை நேசிக்க ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என தன்னை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக பதிலளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது மட்டும் கொஞ்சம் நீளமாக இருந்தா.... மத்தபடி எல்லாம் ஓகே.... !