நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு பிரதீப் ரங்கநாதன் தந்த பதில்..!

Mahendran
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (12:03 IST)
லவ் டுடே', 'டிராகன்' போன்ற தொடர் வெற்றி படங்களைக் கொடுத்த இளம் நடிகர் பிரதீப் ரங்கநாதன், தனது புதிய திரைப்படமான 'டியூட்'-இன் தெலுங்கு முன்வெளியீட்டு நிகழ்வில் கூர்மையான கேள்வியை எதிர்கொண்டார்.
 
ஒரு பெண் பத்திரிகையாளர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை. ஆனால் இரண்டு வெற்றிப் படங்கள், இத்தனை ரசிகர்களை பெற்றிருக்கிறீர்கள். இது அதிர்ஷ்டமா அல்லது கடின உழைப்பா?" என்று கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
அதற்கு அமைதியாக பதிலளித்த பிரதீப், "மக்கள் என் வழியாக தங்களை பார்க்கிறார்கள். கடின உழைப்பும் கடவுளின் ஆசிர்வாதமுமே இதற்கு காரணம்" என்று முதிர்ச்சியாக பதிலளித்தார்.
 
அவரது பதிலுக்கு அரங்கிலிருந்தவர்கள் கைதட்டிப் பாராட்டினர். இருப்பினும், சமூக வலைதளங்களில், அந்த கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஒரு நடிகரின் வெற்றியை தோற்றத்தை வைத்து மதிப்பிடுவது அநாகரிகமானது என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை.. கேள்வி கேட்ட பத்திரிகையாளருக்கு பிரதீப் ரங்கநாதன் தந்த பதில்..!

கால் உடைந்த கானா வினோத்! தள்ளி விட்டது யார்? பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நடிகராக அறிமுகமாகும் இன்பநிதி! முதல் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்! - வெளியான அப்டேட்!

தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு வழிவிடாத காந்தாரா 1… 100 தியேட்டர்களில் தொடரும் காட்சிகள்!

எட் ஷீரனுடன் கைகோர்க்கும் சந்தோஷ் நாராயணன்… எதிர்பார்ப்பை எகிறவைத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments