பிக்பாஸ் சீசன் 9-ன் பரபரப்பான இரண்டாவது வாரத்தில் முதல் டாஸ்க்கில் பல களேபரங்கள் நடந்துள்ளன.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 9வது சீசன் இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது. முதல் வாரத்தில் வாட்டர்மெலன் ஸ்டார் மட்டுமே கண்டெண்டாக இருந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் ஒவ்வொருவரும் ப்ளான் செய்து ஸ்கோர் செய்யத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் இரண்டாவது வாரத்தின் முதல் டாஸ்க்காக மாஸ்க் போட்டி காட்டப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ம்யூசிக் சேர் போல ஒவ்வொரு ஸ்லாப்பாக மூடப்படும் கடைசியாக மாஸ்க் எடுத்து வரும் போட்டியாளர் தோற்பார். இந்த சுற்றில் கானா வினோத் மாஸ்க்கை தூக்கி ஓடிவரும்போது சிலர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக ப்ரோமோவை பார்க்கும்போது தெரிகிறது.
இது ஒரு ஆரோக்கியமான கேமாக இல்லாமல் Aggression கேமாக நடந்திருக்கும் பட்சத்தில் கானா வினோத்தை தள்ளிவிட்டது யார் என்ற குறும்படம் வெளியாகலாம் என்றும், விஜய் சேதுபதி வார இறுதியில் இதுகுறித்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K