Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகர் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் லக்கி மேன்!

பிரபல நடிகர் இயக்கத்தில் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் லக்கி மேன்!
, செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (08:19 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதையடுத்து சமீபத்தில் அவர் நடித்த பொம்மை நாயகி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து இப்போது பிரபல நகைச்சுவை நடிகர் பாலாஜி வேணுகோபால் இயக்கும் லக்கிமேன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே லக்கி மேன் என்ற பெயரில் கார்த்தி நடித்த படத்தை பிரதாப் போத்தன் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ''வாரிசு'' படம் 300 கோடி வசூல்...ரசிகர்கள் கொண்டாட்டம்