Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்புவின் பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்… கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

சிம்புவின் பத்து தல படத்தின் ஓடிடி உரிமம்… கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!
, வியாழன், 2 பிப்ரவரி 2023 (14:49 IST)
கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு ‘பத்து தல’ என்ற பெயரோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மார்ச் மாதம் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆன நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிடியின் மறுமணம் குறித்து கூறிய அக்கா பிரியதர்ஷினி - யார் அந்த மாப்பிள்ளை ?