Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

KGF Chapter 2 - ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!!

Advertiesment
KGF Chapter 2 - ரன்னிங் டைம், சென்சார் அப்டேட் இதோ!!
, வியாழன், 31 மார்ச் 2022 (17:02 IST)
ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின் ரன்னிங் டைம், சென்சார் குறித்து  தகவல் வெளியாகியுள்ளது. 

 
கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.
 
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎஃப் சாப்டர் 2 ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பௌ கூட்டியுள்ளது. ஏப்ரல் 14 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில் கேஜிஎஃப் 2 படத்தின் ரன்னிங் டைம், சென்சார் குறித்து  தகவல் வெளியாகியுள்ளது. 
 
பீரியட் ஆக்சன் படமான இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரன்னிங் நேரத்தைப் பொறுத்தவரை 2 மணி நேரம் 48 நிமிடங்கள் மற்றும் 06 விநாடிகளை இந்தப்படம் கொண்டுள்ளது. ‘கேஜிஎஃப்: சாப்டர் 1’ படம், 2 மணி நேரம் 35 நிமிடங்களைக் கொண்டிருந்த நிலையில், இரண்டாம் பாகம் சுமார் 13 நிமிடங்கள் கூடுதலாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்டராப்லெஸ் உடையில் நச்சுனு கவர்ச்சி காட்டிய ரகுல் ப்ரீத் சிங்!