Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்க போனாலும் அரபிக்குத்துதான்… பூஜா ஹெக்டேவை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!

எங்க போனாலும் அரபிக்குத்துதான்… பூஜா ஹெக்டேவை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்!
, சனி, 5 மார்ச் 2022 (15:11 IST)
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நேற்று நடந்தது.

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ராதே ஷ்யாம். இந்தியா முழுவதும் 5 மொழிகளில் இந்த படம் மார்ச் 11 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சுமார் 10000 திரையரங்குகளில் இந்த படம் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது.

இதையடுத்து சென்னையில் நேற்று நடந்த இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினரோடு உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொண்டு பேசினார். படக்குழுவினர் ஒவ்வொருவரைப் பற்றியும் பாராட்டிய பேசிய அவர் பூஜா ஹெக்டே நடிப்பில் பீஸ்ட் படத்தில் வெளியாகி 125 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டு வைரல் ஹிட் ஆகியுள்ள அரபிக்குத்து பாடல் பற்றியும் பேசினார். அப்போது பூஜா ஹெக்டேவைக் குறிப்பிட்டு ‘ஏற்கனவே குத்து குத்துன்னு குத்திட்டு இருக்காங்க பூஜா ஹெக்டே. எங்க பாத்தாலும் அரபிக்குத்துதான்’ என்று அவரைப் பாராட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவில் அறிமுகம் ஆகிறாரா ரகுவரனின் மகன்!