Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, செவ்வாய், 10 ஜூன் 2025 (10:33 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன். ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியது. ஆனால் அதன் பின்னர் எழுந்த எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் பெருமளவில் வீழ்ச்சியை சந்தித்தது.

விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் கூட வசூலில் ஏற்றம் காணவில்லை. இந்நிலையில் நேற்று ஐந்தாம் நாளில் இந்த படத்தின் வசூல் சுமார் 3.5 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளது. இதுவரை இந்தியாவில் 40 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூலித்துள்ளது. இதனால் கமல்ஹாசனின் முந்தைய தோல்விப் படமான இந்தியன் 2 வசூலைக் கூட தக் லைஃப் கடக்காது என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!