Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, வெள்ளி, 6 ஜூன் 2025 (14:29 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் நடித்துள்ள படம் தக் லைஃப். ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ரவி கே சந்திரன் இசையமைத்துள்ளார். நேற்று இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தன் மகள் பணியாற்றியது குறித்து நடிகர் குஷ்பூ மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

குஷ்புவின் இளைய மகள் அனந்திகா சுந்தர் இந்த படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். இது பற்றி குஷ்பு “இந்த படத்தில் எலும்பு முறிவு காரணமாக குறைந்த நாட்களே அனந்திகா வேலை செய்தார். ஆனாலும் அவர் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டது வாழ்நாள் முழுமைக்குமானது மணி சார். என் மகள் பெயரை மணிரத்னம் படத்தில் பார்ப்பது பெருமையாக உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!