Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுமுறை நாட்களிலும் ஏற்றம் காணாத ‘தக் லைஃப்’ வசூல்!

Advertiesment
தக் லைஃப் திரை விமர்சனம்

vinoth

, திங்கள், 9 ஜூன் 2025 (11:27 IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன். ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் இரண்டாம் நாளில் வசூல் 8 கோடி ரூபாய் அளவுக்கு பாதியாகக் குறைந்தது.

இதனால் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடுமுறை நாட்களிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. சனிக்கிழமை இந்திய அளவில் 7.7 கோடி ரூபாயும், ஞாயிற்றுக் கிழமை இந்திய அளவில் 6.5 கோடி ரூபாயும் மட்டுமே வசூலித்துள்ளது. மொத்தமாக நான்கு நாட்களில் 37 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய காட்சிகள்.. மீண்டும் புதிதாக எடிட்டிங்.. ஓடிடியில் வெளியான ‘லால் சலாம்’ படத்திற்கு வரவேற்பு..!