Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாண்டிங்கின் இந்த சாதனையை கோலி முறியடிப்பாரா?

Advertiesment
பாண்டிங்கின் இந்த சாதனையை கோலி முறியடிப்பாரா?
, செவ்வாய், 15 ஜூன் 2021 (17:00 IST)
இந்திய கேப்டன் கோலி சர்வதேச போட்டிகளில் கடைசியாஅ 2019 ஆம் ஆண்டுதான் சதமடித்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா காரணமாக இந்தியா அதிகளவில் சர்வதேசப் போட்டிகளில் விளையாடவில்லை என்பதால் கோலி எந்தவொரு சதமும் அடிக்கவில்லை. 2019 ஆம் ஆண்டுதான் சதமடித்திருந்தார். இந்நிலையில் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங் கேப்டனாக அடித்த 41 சதங்கள் என்ற சாதனையை கோலி தகர்ப்பார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஜராத்தி மொழியில் பம்பர் ஹிட் அடித்த விஜய் சேதுபதி படம்… அடுத்து பஞ்சாயிலாம்!