மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் இன்று முக்கொம்பு பகுதியை வந்தடைந்துள்ளது.
காவிரி டெல்டா பாசன விவசாயத்திற்காக வருடந்தோறும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டும் இன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படும் என சில தினங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளது தமிழக அரசு. தற்போதைய நீர்மட்டம் 97.13 அடியாகவும், நீர் இருப்பு 61.43 டிஎம்சியாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காவிரி நீர் திருச்சி முக்கொம்பை வந்தடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் தானியங்கள் மற்றும் மலர்களை தூவி காவிரி நீரை வரவேற்றனர். நாளை காலை கல்லணை திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.