Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

59 வயதிலும் ஏன் திருமணம் செய்யவில்லை - கோவை சரளா தகவல்

Advertiesment
Why notmarried at the age of 59  திருமணம் செய்யவில்லை
, புதன், 28 ஏப்ரல் 2021 (22:24 IST)
மாயா,  முனி, உள்ளிட்ட படங்களில் நடித்து மறைந்த நடிகை  மனோரமாவுக்குப் பிறகு காமெடி முதற்கொண்டு அனைத்து வேடங்களிலும் நடித்து தனக்கு என தனி ரசிகர்கள் பட்டாளைத்தை வைத்துள்ளவர் கோவை சரளா(59).

இவர்  250கும் மேற்பட்ட படங்களுக்கு மேல் பல்வேறு மொழிகளில் நடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில்,  இவர் சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் தான் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

தான் சினிமாவுக்குப் 15 வயதில்  நடிக்க வந்ததாகவும், தனது 4 தங்கை மற்றும் ஒரு தம்பியுடன் கோவையில் பிறந்து வளர்ந்ததாகவும் அவர்களின் பிள்ளைகளை படித்து வைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாகவும், தன் வாழ்க்கையை தன் சொந்த சகோதர சகோதரிகளுக்கு அர்ப்பணித்து விட்டதால் தான் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் எழவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை கோவை சரளாவில் பெருந்தன்மையான எண்ணத்திற்கு சேவைநோக்கத்திற்கும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உண்மையான ஹீரோ இதுதான் - விஜய் படத் தயாரிப்பாளர் டுவீட்