நடிகரும் சமூக சேவை ஆர்வலருமான சோனு சூட்டிடம் உதவி கேட்டு பலரும் காத்திருக்கின்றனர்.
கொரொனா காலத்தில் ஏழைகள்,விவசாயிகளுக்கு கடனுதவி - டிராக்டர் , மாணவர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் மற்றும் சொந்த நாடுகளுக்குச் செல்ல உதவிசெய்தவர் சோனு சூட்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களை இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
எனவே நடிகர் சோனு சூட் என்ற நடிகரை தாண்டி மக்கள் அவரிடமுள்ள மனிதநேயத்தால் அவரை கடவுளாகவும் கருத்து பூஜை செய்து சிலை வைத்து வழிபடவும் செய்தனர்.
தற்போது இரண்டாம் கொரோனா அலை பெரும் விஸ்ரூபமெடுத்துள்ளதால் மக்கள் அவரிடம் உதவி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளனர். அவரும் தன்னால் முடிந்தளவு உதவி செய்வேன் என கூறியுள்ளார்.
திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமாகி நடித்தாலும் அவர் தற்போது மக்கள் மனங்கள் அழியாப் புகழுடன் வாழ்கிறார். அவர் இனிமேல் வில்லன் வேடங்களில் நடிக்கமாட்டேன் எனக் கூறியுள்ளார்.