நடிகர் தனுஷுக்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் திரைக்கதை தயார் செய்தார் இயக்குனர் ராம்குமார்.
முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குனர் ராம்குமார் இயக்க தனுஷ் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்தப் படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க இருந்தது. இந்த படம் பற்றிய அறிவிப்பு ஓராண்டுக்கு முன்னரே வெளியானது. ஆனால் இன்னமும் அந்த படம் தொடங்கப்படவில்லை. அதற்கான காரணம் இயக்குனர் ராம்குமார்தானாம். அந்த படம் ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம் என்பதால் திரைக்கதைக்காக ஒரு ஆண்டுக்கும் மேலாக எடுத்துக் கொண்டாராம் ராம்குமார்.
இந்நிலையில் இப்போது முழு திரைக்கதையையும் முடித்துள்ள ராம்குமார், அதை தனுஷிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த கதை வேறு ஏதோ ஒரு படத்தின் தழுவல் என நினைக்கும் தனுஷ், இதுபற்றி இயக்குனரிடம் பேச இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்து அந்த கூட்டணி உடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இந்நிலையில் ராம்குமார் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தனுஷ் மற்றும் ராம்குமார் இடையிலான கருத்து வேறுபாட்டுக்குக் காரணம் என்ன என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ராம்குமார் சொன்ன கதை ஏதோ ஒரு கார்ட்டூன் படத்தின் கதை என தனுஷ் கண்டுபிடித்துவிட்டதால்தான் இயக்குனரோடு மோதல் உருவாகி இந்த கூட்டணி உடைந்ததாக சொல்லப்படுகிறது.