Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சர்கார் தமிழ் வார்த்தையா? விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்ட கருணாகரன்

Advertiesment
சர்கார் தமிழ் வார்த்தையா? விஜய் ரசிகர்களுடன் சண்டை போட்ட கருணாகரன்
, ஞாயிறு, 7 அக்டோபர் 2018 (18:21 IST)
சர்க்கார் இசை வெளியீட்டு விழாவில்  அரசியல் பேசிய நடிகர் விஜய்  குட்டிக்கதை கூறினார் . இந்நிலையில் விஜய்யின் குட்டிக்கதை மற்றும் அவரது கருத்தை விமர்சித்த கருணாகரன், “குட்டி கதைகள் வெறும் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் தன் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்” என விஜய்யை மறைமுகமாக சாடினார் .


இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை கோபத்தில் கெட்ட கெட்ட வார்த்தைகளால் வறுத்து எடுத்தனர். ரசிகர்களின் கோபத்துக்கு பதிலளித்த கருணாகரன், “”தம்பி எங்க அப்பா இந்த நாட்டுக்காக ’ரா’(RAW) அதிகாரியாக என்ன எல்லாம் செய்தார் என்று உனக்கு தகவலுக்காக சொல்கிறேன். உன்னைப் போன்ற ஃபேக் ஐடியில் வந்து தகாத வார்த்தைகளால் பேசுவதால் தான் விஜய் சாரை வெறுக்கிறேன்” என்று கோபத்துடன் தெரிவித்திருந்தார்.
webdunia


இந்நிலையில் ரசிகர்களுடனான இந்த வார்த்தை போரை விஜயின் ட்விட்டர் பக்கத்திலும் டாக் செய்திருந்தார் கருணாகரன். இதற்கு பின்னும் தங்களின் தகாத வார்த்தை அர்ச்சனையை நிறுத்தாத விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஆந்திராவை சேர்ந்தவன் என்று திட்டியிருந்தனர். இதற்கு பதிலளித்த கருணாகரன் "முட்டாள் தனமாக நான் தமிழ்நாட்டை சேர்ந்தவனா என்று கேள்வி கேட்காதீங்க, சர்கார் என்பது தமிழ் டைட்டிலா என்று நான் கேட்டேனாஎன கோபத்துடன் கூறியிருந்தார்.

மேலும் தன்னை திட்டுபவர்கள் தைரியமிருந்தால் @actorvijay என்ற முகவரியில் உங்களின் ஐடி-யோடு டாக் செய்யுங்க பார்க்கலாம் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பார்த்ததுமே ஒருவருடைய அந்தரங்க வி‌ஷயங்களை புரிந்து கொள்வேன்: ரகுல் பிரீத் சிங்